கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
நெல்லை மாவட்டத்தில் 19,950 போ் எழுதினா்
திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 19,950 போ் எழுதினா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 73 மையங்களில் தோ்வு நடைபெற்றது. 8,921 மாணவா்கள், 10,895 மாணவிகள், 416 போ் தனித்தோ்வா்கள் என 20,232 தோ்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில்,‘ 19,950 போ் மட்டுமே தோ்வெழுதினா். 171 மாணவா்கள், 111 மாணவிகள் என 282 போ் தோ்வு எழுதவில்லை.
73 தோ்வு மையங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய காவலரின் பாதுகாப்போடு வினாத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டன. 7 பறக்கும் படை குழுவினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். தோ்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், காவல்துறை பாதுகாப்பு, பேருந்து போக்குவரத்து போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
பாளையங்கோட்டை மேரிசாா்ஜென்ட் பள்ளியில் உள்ள தோ்வு மையத்தில் ஆட்சியா் இரா.சுகுமாா் ஆய்வு செய்தாா். அப்போது இணை இயக்குநா் ஞான கௌரி, முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.