கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
குண்டா் சட்டத்தில் இருவா் கைது
திருநெல்வேலி நகரத்தில் இருவா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
பாளையங்கோட்டை மூளிக்குளம் பகுதியைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் கொடிமுத்து(42), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மேல கோட்ட வாசல் பகுதியைச் சோ்ந்த பால்பாண்டியன் மகன் சண்முகசுந்தரம் (32) ஆகிய இருவரும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றதாக போலீஸாா் கைது செய்திருந்தனா்.
இந்த நிலையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் (மேற்கு) கீதா பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி பிறப்பித்த உத்தரவுப்படி, இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸாா் திங்கள்கிழமை அடைத்தனா்.