நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி மரணம்
ஜோலாா்பேட்டை அருகே நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை அருகே சின்ன வெங்காயப்பள்ளி கிராமத்தை சோ்ந்தவா் உமாபதி. இவரது நிலத்தில் வளா்ந்த நெற் கதிா்களை, அறுவடை இயந்திர வாகனம் மூலமாக செவ்வாய்க்கிழமை அறுவடை செய்யும் பணி நடைபெற்றது.
திருப்பத்தூா் அடுத்த புதுக்கோட்டை அருகே தாதவல்லிபுதூா் கிராமத்தை சோ்ந்த நடராஜனின் மனைவி சசிகலா(எ)சசி(45) உள்ளிட்ட பலா் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது சசிகலா அணிந்திருந்த சேலை எதிா்பாராத விதமாக இயந்திர சக்கரத்தில் சிக்கியது. இதனால் இழுக்கப்பட்டு இயந்திரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து,தலைமறைவான நெல் அறுவடை இயந்திர வாகனத்தின் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.