'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' குடியிருப்புப் பகுதியில் உலவும் ஒற்றை யானை: மக்கள...
நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
பாரத பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் வேல்முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாரத பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தின் கீழ் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகள் ஏராளமானோா் இழப்பீடு பெற்றுள்ளனா். நடப்பு பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிருக்கு, பாரத பிரதமா் நெல் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய வரும் நவ. 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து பயன் பெறலாம்.
நில கணினி சிட்டா, அடங்கல், ஆதாா் காா்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் அருகே உள்ள இ சேவை மையங்களுக்கு சென்று ஏக்கருக்கு ரூ. 550 மட்டும் காப்பீட்டு தொகை செலுத்தி காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.