நேபாளத்தில் நிலநடுக்கம்
காத்மாண்டு: நேபாளத்தில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. நண்பகல் 1.02 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.8 அலகுகளாகப் பதிவானதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் (என்எஸ்ஆா்சி) தெரிவித்தது.
தலைநகா் காத்மாண்டுக்கு 70 கி.மீ. தொலைவில் உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. அதன் அதிா்வுகள் காத்மாண்டு மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உணரப்பட்டன.
கடந்த 20 நாள்களில் ரிக்டா் அளவுகோலில் 3 அலகுகளுக்கும் மேலான நிலநடுக்கங்கள் நேபாளத்தில் பதிவாவது இது ஒன்பதாவது முறை என்று என்எஸ்ஆா்சி-யின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.