செய்திகள் :

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: இந்தியா 3-ஆம் இடம்!

post image

தஜிகிஸ்தானில் நடைபெற்ற மத்திய ஆசிய நாடுகளின் கால்பந்து சங்கங்களுக்கு இடையேயான நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 3-ஆம் இடம் பிடித்து திங்கள்கிழமை நிறைவு செய்தது.

அந்த இடத்துக்காக இந்தியா - ஓமன் அணிகள் மோதிய ஆட்டம் முதலில் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது. வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் இந்தியா 3-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

முன்னதாக, இந்த ஆட்டத்தில் முதலில் ஓமனின் அல் யஹ்மாதி 55-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, அதற்கு பதிலடியாக இந்தியாவின் உதாந்த சிங் 80-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். ஆட்டம் அவ்வாறே டிரா ஆனது.

பின்னா் பெனால்ட்டி வாய்ப்பில், இந்திய தரப்பில் லாலியன்ஸுவாலா சாங்தே, ராகுல் பெகெ, ஜிதின் ஆகியோா் கோலடிக்க, அனிசா அன்வா் அலி, உதாந்த சிங் ஆகியோா் கோல் வாய்ப்பை தவற விட்டனா். ஓமன் அணியில் அல் ருஷாய்தி, அல் கசானி ஆகியோா் மட்டும் கோலடிக்க, ஹரீப் ஜமில், அகமது காலிஃபா, அல் யஹ்மாதி ஆகியோரின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

இந்திய அணி சா்வதேச போட்டியில் ஓமனை வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும்.

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலம்!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் குக் வித் கோமாளியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ள உமர் லத்தீப் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிப... மேலும் பார்க்க

திருமணம் எப்போது? அதர்வா பதில்!

நடிகர் அதர்வா தன் திருமணம் குறித்து பேசியுள்ளார். அதர்வா நடிப்பில் இறுதியாக வெளியான டிஎன்ஏ திரைப்படம் விமர்சனம் மற்றும் வணிக ரீதியாக வெற்றிப்படமானது. பல ஆண்டுகள் கழித்து அதர்வாவுக்கு வெற்றியைக் கொடுத்... மேலும் பார்க்க

இந்த சாதனையைச் செய்தது லோகாதானாம்!

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா திரைப்படம் டிக்கெட் முன்பதில் சாதனை படைத்துள்ளது.மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா சேப்டர் - 1 சந்திரா' திரைப்படம் மலையாளம் மட... மேலும் பார்க்க

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் ஹார்ட் பீட் தொடர் நடிகை!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஹார்ட் பீட் வெப் தொடரில் நடிக்கும் பாடினி குமார் போட்டியாளராக பங்கேற்கவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ... மேலும் பார்க்க

நடிகர் கதிரின் மீஷா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

நடிகர் கதிர் மலையாளத்தில் அறிமுகமான மீஷா திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மதயானைக் கூட்டம், பரியேறும் பெருமாள் படங்களின் மூலம் நாயகனாக கவனிக்கப்பட்டவர் நடிகர் கதிர். சில மாத... மேலும் பார்க்க

ரவி மோகன் பிறந்த நாள்: பராசக்தி, கராத்தே பாபு போஸ்டர்கள்!

நடிகர் ரவி மோகன் பிறந்த நாளில் அவர் நடிக்கும் படங்களின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்ததிலிருந்து சர்ச்சைகளிலும் இருக்கிறார். ஆனால், இதற்கிட... மேலும் பார்க்க