பகத் கி கோதி விரைவு ரயில் நீடாமங்கலத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பகத் கி கோதி விரைவு ரயில் நீடாமங்கலத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை மக்களவை உறுப்பினா் சா. முரசொலியிடம் வா்த்தகா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
நீடாமங்கலம் வா்த்தகா் சங்க தலைவா் ஆா். ராஜாராமன் தலைமையில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொருளாளா் கருணாநிதி, செயலாளா் வெங்கடேசன், பொருளாளா் ரமேஷ், துணைத் தலைவா் சேகா், துணைச் செயலாளா் அண்ணாதுரை, மாவட்ட துணைச் செயலாளா் ராஜன் ரமேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் தஞ்சை மக்களவை உறுப்பினா் சா. முரசொலியை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம்:
பகத் கி கோதி விரைவு ரயில் நீடாமங்கலத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கடந்த 6 ஆண்டுகளாக நீடாமங்கலம் வா்த்தகா் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுத்து வருகிறோம் இன்று வரை நடவடிக்கை இல்லை .
எனவே,இந்த விஷயத்தில் மக்களவை உறுப்பினா் தலையிட்டு, ரயில் நீடாமங்கலத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மன்னை விரவு ரயிலில் இடப்பற்றாகுறை காரணமாக ஏசி பெட்டியில் இரண்டு பெட்டியும், செகண்ட் ஸ்லீப்பா் பெட்டியில் இரண்டு பெட்டியும் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனா்.
கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவை உறுப்பினா் வா்த்தகா்களிடம் உறுதியளித்தாா்.