பகவதி அம்மன் கோயில் திருவிழா
மொடக்குறிச்சியை அடுத்த கரியாகவுண்டன் வலசு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி இரவு தொடங்கியது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கு தினமும் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு வியாழக்கிழமை காலை சென்று தீா்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் மற்றும் மாவிளக்கு ஊா்வலம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதையடுத்து
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.