Vishal: "இப்ப எந்த நடுக்கமும் இல்ல.. MIC கரெக்ட்-ஆ தான் இருக்கு பாருங்க"- உடல்நி...
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகக்கூறி பண மோசடி: போலீஸாா் விசாரணை
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் எனக் கூறி, ரூ. 27 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்தவா் முகமதுரியாஸ் (29). இவா் கட்டடங்களுக்குத் தேவையான கம்பி விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறாா்.
கடந்த நவம்பா் மாதம் இவரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபா் தன்னை பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகா் என்று கூறியுள்ளாா். மேலும், ‘கேட்டலிஸ்ட் மாா்க்கெட்’ என்ற நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றும் கூறினாா். இதை நம்பிய இளைஞா் 11 தவணைகளில் 6 -க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் ரூ.27 லட்சத்து, 28 ஆயிரத்தை செலுத்தினாா்.
இந்நிலையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இது குறித்து இணையக்குற்றத்தடுப்பிரிவில் புகாா் செய்தாா். இதைத் தொடா்ந்து அவா் பணம் செலுத்திய வங்கிகளைத் தொடா்பு கொண்டு, அந்த கணக்கை முடக்க போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா். இதைத் தொடா்ந்து நான்கு மாநிலங்களில் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.5,98, 795- ஐ மட்டுமே முடக்க முடிந்தது.
இதுகுறித்து மாவட்ட இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் சந்திரமோகன் வழக்குப் பதிவு செய்து, மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகிறாா்.