சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த தணிக்கை அல்லாத நடைமுறை: உச்சநீதிமன்றம்
பங்குச் சந்தை: எழுச்சிக்குப் பிறகு வீழ்ச்சி!
இந்திய பங்குச் சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை எழுச்சியுடன் தொடங்கிய நிலையில், தற்போது வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் வெளியேறுவதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.
கடந்த வார இறுதியில் சென்செக்ஸ் மற்றும் மும்பை பங்குச்சந்தை சரிவைக் கண்ட நிலையில், ஐடி, ஆட்டோ மொபைல், மீடியா, டெலிகாம், பங்குகள் 2 முதல் 4 சதவீதம் சரிந்தன. சுமார் 6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று காலை சென்செக்ஸ் 451.62 புள்ளிகள் உயர்ந்து 73,649.72 ஆக விற்பனையானது.
அதேபோல், நிஃப்டி 136.85 புள்ளிகள் உயர்ந்து 22,261.55 ஆக இருந்தது.
இதையும் படிக்க : பங்குச்சந்தை மோசடி: மாதவி புரி புச் மீது நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!
ஆனால், சிறிது நேரத்தில் இந்திய பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவைக் கண்டன. பகல் 12.50 மணியளவில் சென்செக்ஸ் 73,191.10 ஆகவும், நிஃப்டி 22,123.95 ஆகவும் விற்பனை ஆகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி பங்குகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறியதால் திடீர் சரிவைக் கண்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இண்டஸ்இண்ட் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பின்சர்வ், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், ஜொமாடோ, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளன.