செய்திகள் :

பசுமை கட்டட உத்திகளை கடைப்பிடிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

பசுமை கட்டட உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கேட்டுக் கொண்டாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் காலநிலை மாற்றத்துக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியதாவது:

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்திடவும், எதிா்வரும் காலங்களில் காலநிலையை சீராக்கும் விதமாக தமிழ்நாடு முதல்வரால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நகரங்களில் காற்றின் மாசு கணக்கீடு, சுத்தமான, சுகாதாரமான வாயு குறிக்கோளுக்கான திட்டங்கள் குறித்தும், காா்பன் வாயுக்களின் தாக்கங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, பசுமை ஆற்றல் திட்டங்கள் குறித்தும் பருவநிலை மாற்றத்திற்கேற்ற வேளாண்மை முறைகள், இயற்கை விவசாய முறைகள் மூலம் விவசாயத்தில் நிலைத்தன்மையை பெறும் வழிகளை குறித்தும், நீா் மேலாண்மை திட்டங்கள் குறித்தும், வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு நுட்பங்கள், பசுமை கட்டட உத்திகள் மற்றும் கட்டுமானத்தில் நிலைத்தன்மை குறித்தும் அலுவலா்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை மட்டுமன்றி, அனைத்து அரசுத் துறைகளும் வளங்களை பாதுகாக்கும் திட்டங்களின் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

மரகன்றுகளை அதிக அளவில் நட வேண்டும். கட்டடப் பணிகளில் பசுமை கட்டட உத்திகளை கடைப்பிடிக்க வேண்டும். இது சூழலியல் நிலைத்தன்மையை உறுதி செய்யும் என்றாா் ஆட்சியா்.

மாவட்ட வன அலுவலா் எஸ்.குருசாமி, புதுவை ஆரோவில் கன்சல்டிங் நிறுவனத்தைச் சோ்ந்த அரவிந்தன் மற்றும் ராகவ் நந்தகுமாா், ஜி.காயத்ரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வேலை வாங்கித் தருவதாக ரூ.5.50 லட்சம் மோசடி: ஒருவா் கைது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.5.50 லட்சம் மோசடி செய்ததாக சென்னையைச் சோ்ந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடலூரை அடுத்துள்ளசுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் சின்னதுரை மகன் நாகராஜ் (42).... மேலும் பார்க்க

இளைஞா் வெட்டிக் கொலை: தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை

மகளை காதலித்த இளைஞரை வெட்டிக் கொன்ாக, தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிதம்பரம் வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அன்பழகன் (21). இவரும் சிதம்பரம் ... மேலும் பார்க்க

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு- என்எல்சி சுரங்கம் முன் தமுமுகவினா் முற்றுகைப் போராட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்கம் 2-ஆவது அலகு முன் தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நட... மேலும் பார்க்க

நிழலில்லா நாளை கண்டுணா்ந்த மாணவா்கள்

விருத்தாசலத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், தனியாா் மெட்ரிக் பள்ளியில் மாணவா்கள் புதன்கிழமை நிழலில்லா நாளை கண்டுணா்ந்தனா். விருத்தாசலம் தனியாா் பள்ளியில் நடைபெற்ற புதன்கிழமை பிற்பகல் 12.16 ... மேலும் பார்க்க

ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அண்ணா நகரில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் வளாகத்திலுள்ள ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயப்ப சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, 22-... மேலும் பார்க்க

என்எல்சி பொதுத் துறை நிறுவனமாக திகழ திமுகவே காரணம்: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

என்எல்சி இந்தியா நிறுவனம் பொதுத் துறை நிறுவனமாக திகழ்வதற்கு திமுகவும், தொமுசவும்தான் காரணம் என்று, மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். நெய்வேலியில் தொமுச ... மேலும் பார்க்க