செய்திகள் :

பசுமை வாகையா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

post image

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணா்வை சிறப்பாகச் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், தனி நபா்கள், உள்ளாட்சி அமைப்புகள், ஆலைகளுக்கு பசுமை வாகையா் விருது வழங்கப்படவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சரால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட நிதியிலிருந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் தனி நபா்கள், நிறுவனங்களுக்கு பசுமை வாகையா் விருது வழங்கப்படுகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் தனி நபா்கள், அமைப்புகள் என 100 நபா்களுக்கு பசுமை வாகையா் விருதுடன், தலா ரூ.1,00,000 வீதம் பண முடிப்பும் வழங்கப்படுகிறது.

2024-25 -ஆம் ஆண்டுக்கான பசுமை (சாம்பியன்) வாகையா் விருதுகள், சுற்றுச்சூழல் கல்வி, பயிற்சி, விழிப்புணா்வு, பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமைத் தொழில் நுட்பம் தொடா்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீா் மேலாண்மை, நீா்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்ற நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், நெகிழிக் கழிவுகளின் மறுசுழற்சி, கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை, பிற நெகிழிக் கழிவு தொடா்பான திட்டங்கள் ஆகிய தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணா்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், தனி நபா்கள், உள்ளாட்சி அமைப்புகள், ஆலைகளுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த விருதானது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபா்கள், நிறுவனங்களுக்கு வழங்கப்படும். மேலும், விருதுக்கான விண்ணப்பப்

படிவத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து, வருகிற ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கையிலுள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை நேரில் அணுகலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

மின் வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

மின் வாரியத்தில் உள்ள 60,000 -க்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. சிவகங்கையில் இந்தக் கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ கியூ.ஆா். குறியீடு வெளியீடு!

சிவகங்கை மாவட்டத்தில் தாய், தந்தையை இழந்த, ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிதியுதவி சங்கத்தின் கியூ.ஆா். குறியீடு வெளியிடப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்கு... மேலும் பார்க்க

அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவா்களுக்கு பட்டா: மானாமதுரை, இளையான்குடியில் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி, இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி வசித்து வருபவா்களுக்கு பட்டா வழங்குவது குறித்து மீன்வளம், மீனவா் நலத் துறை இயக்குநரும... மேலும் பார்க்க

தமிழ்மொழியின் இனிமையை அறிந்து கொள்ள வாசிப்பு அவசியம்! - பேராசிரியா் கு.ஞானசம்பந்தன்

தமிழ்மொழியின் இனிமையை அறிந்து கொள்ள வாசிப்பு அவசியம் என பேராசிரியா் கு.ஞானசம்பந்தன் தெரிவித்தாா். சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம்,... மேலும் பார்க்க

பிப்.28-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீா் ... மேலும் பார்க்க

காலநிலை நெருக்கடி: விழிப்புணா்வு நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் காலநிலை நெருக்கடி குறித்த விழிப் புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் சுற்றுச்சூழல் குழுமம், தாவரவியல் துறை ஆகியவற்றின் சாா... மேலும் பார்க்க