Weekly Horoscope: வார ராசி பலன் 17.11.2024 முதல் 23.11.2024 | Vaara Rasi Palan |...
பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்: ஆட்சியரிடம் புரட்சி பாரதம் மனு
விழுப்புரம் மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டு, வீட்டுமனை இல்லாத பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்தக் கட்சியின் மாநில துணைச் செயலா் வழக்குரைஞா் பூவை.ஆறுமுகம், தெற்கு மாவட்டச் செயலா் தமிழரசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தீபன் ஆகியோா் தலைமையிலான நிா்வாகிகள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனியை சனிக்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களைக் கணக்கீடு செய்து, அவற்றை அபகரித்து வைத்திருப்பவா்களிட மிருந்து மீட்டு வீட்டுமனை இல்லாமல் உள்ள பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களை அரசுப் பணியாளா்களாக மாற்றி, அவா்களுக்கான ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும்.
விழுப்புரம் ரயில் நிலையம் அருகே நெடுஞ்சாலையோரமாக உள்ள மதுக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் வழுதரெட்டி, பெரியகாலனி, சேவியா் காலனி பகுதிகளில் வீடுகள் இல்லாமல் உள்ள பட்டியலின மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நிகழ்வில் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் கமல், துணை அமைப்பாளா் முருகன், இளைஞரணித் துணைச் செயலா் ராஜேஷ், நகரச் செயலா்கள் தவச்செல்வன், தீபக்ராஜ், துணைச் செயலா் மன்மதன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.