பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு பாஜகதான் பொறுப்பு: ஆம் ஆத்மி
விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு பாஜகதான் பொறுப்பு என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.