போலீஸ் பாதுகாப்புடன் கேரளம் கொண்டு செல்லப்படும் மருத்துவக் கழிவுகள்: ஆட்சியர்
பஞ்சாப்: அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி!
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டடம் சனிக்கிழமை இடிந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.
இவ்விபத்தில் சிக்கியுள்ள 5 பேரை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது, இடிபாடுகளில் சிக்கியிருந்த திருஷ்டி வர்மாவை தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பலியானார்.
பலியானவர் ஹிமாசலப் பிரதேசம் தியோக் பகுதியை சேர்ந்த பஹத் வர்மாவின் மகள் திருஷ்டி வர்மா(வயது 20) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அருகில் உள்ள நிலத்தை தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, கட்டடம் இடிந்து விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: பரஸ்பர நம்பிக்கையே திருமண உறவின் அடித்தளம்: விவாகரத்து வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறை, தேசிய பேரிடா் மீட்புப் படை, காவல் துறை, மருத்துவா்கள் குழு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.