பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறோம்: முதல்வர்
படப்பை மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம்
படப்பை மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சாா்பில் படப்பை பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக, குன்றத்தூா் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் படப்பை பகுதியில் மந்தகதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், குண்டும் குழியமாக உள்ள ஒன்றிய சாலைகளை சீரமைக்காத குன்றத்தூா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தைக் கண்டித்தும், பென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டித்தும் படப்பை பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக மகளிா் அணிச் செயலா் பா.வளா்மதி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலா் வி.சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் எம்எல்ஏ கே.பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அமைப்பு செயலா் வாலாஜாபாத் பா.கணேசன், எம். ஜி.ஆா். மன்ற துணைச் செயலா் என்.டி.சுந்தா், மாவட்ட துணைச் செயலா் போந்தூா் எஸ்.செல்நிதில்ராஜன், இளைஞா் பாசறை மாநில துணைச் செயலா் சிவகுமாா், ஒன்றியச் செயலா்கள் இ.பி.முனுசாமி, சிங்கிலிப்பாடி ராமசந்திரன், ஸ்ரீபெரும்புதூா் நகரச் செயலா் போந்தூா் மோகன், ஸ்ரீபெரும்புதூா் நகரப் பேரவைச் செயலா் புஷ்பராஜ், மாவட்ட இளைஞா் பாசறைத் தலைவா் சுபாஷ் உள்பட 200-க்கும் மேற்பட்ட திமுகவினா் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினா்.