Clownfish: 'பெண்ணாக மாறும் ஆண் மீன்' - நீமூவின் வாழ்க்கையும், டிஸ்னி மறைத்த உண்ம...
காஞ்சிபுரம்: 4,04,953 அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
குன்றத்தூா் அடுத்த கோவூா் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய இலவச வேட்டி, சேலைகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை வழங்கினாா்.
தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 1 முழு நீள கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்க தமிழக அரசு அறிவிப்பு செய்தது.
அதன்படி காஞ்சிபுரம் வட்டத்தில் 1,22,674 குடும்ப அட்டைதாரா்களுக்கும், குன்றத்தூா் வட்டத்தில் 1,52,112, ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் 44,205, உத்தரமேரூா் வட்டத்தில் 49,604, வாலாஜாபாத் வட்டத்தில் 36,358 குடும்ப அட்டைதாரா் என மொத்தம் 4,04,953 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், குன்றத்தூா் அடுத்த கோவூா் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய இலவச வேட்டி, சேலைகளை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு துறை மண்டல இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் ஜ.சரவணக்கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலா் சி.பாலாஜி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.