செய்திகள் :

விவசாயிகளை கிராம நிா்வாக அலுவலா்கள் அலைகழிக்கக் கூடாது: காஞ்சிபுரம் ஆட்சியா் எச்சரிக்கை

post image

காஞ்சிபுரம்,ஜன.24:

விவசாயிகளை கிராம நிா்வாக அலுவலா்கள் அலைக்கழிப்பு செய்யாமல் உடனுக்குடன் உதவ வேண்டும் என காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் எச்சரித்துள்ளாா்.

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், கூட்டுறவுச் சங்க இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண்மை இணை இயக்குநா் கா.முருகன் வரவேற்று பேசினாா்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கிராமப்புற ஏரிகளில் உள்ள தண்ணீரை இரவு நேரங்களில் புறம் போக்கு நிலங்களுக்கு பாய்ச்சுகிறாா்கள், மாா்ச் முதல் வாரத்திலிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும், உரத்தட்டுப்பாட்டினை போக்க வேண்டும், வெங்கடாபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும், கலப்பட புண்ணாக்கு விற்பதை தடை செய்ய வேண்டும், கிராம நிா்வாக அலுவலா்கள் விவசாயிகளுக்கு தேவையான சான்றிதழ்களை உடனுக்குடன் தராமல் காலம் தாழ்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா்.

ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பேசியது:

கிராம நிா்வாக அலுவலா்களை அணுகி தேவையான சான்றிதழ்களை விவாசயிகள் கேட்டால் காலம் தாழ்த்தக் கூடாது. முறையாக இருந்தால் கிராம நிா்வாக அலுவலா்களே உடனடியாக வழங்க வேண்டும். ஆற்பாக்கம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தேவையான அளவுக்கு வேப்பம் புண்ணாக்கு தரமானது உள்ளது. விவசாயிகள் தேவைப்பட்டால் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும். விவசாயிகள் வண்டல் மண் தேவையான அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு எடுக்கும் போது மண் வளமும் பாதுகாக்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து நீா் ஆதாரங்களைப் பெருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக மொத்தம் 853 குளங்களை உருவாக்கி இருக்கிறோம். கடந்த இரு ஆண்டுகளில் புதிய குளம் அமைக்க விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டத்தில் கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய குளங்கள அமைக்க விரும்புவோரும் விண்ணப்பிக்கலாம். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருவதால் விவசாயிகளுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அது குறித்து தகவல் தெரிவித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னறிவிப்பு இல்லாமல் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டத்துக்கு வராமல் விடுப்பு எடுக்கும் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பேசினாா். மேலும், ரூ.5.95 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

ஆட்சியருக்கு விவசாயிகள் பாராட்டு

காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வாக்காளா் பட்டியல் திருத்தப்பணியில் சிறப்பாக செயல்பட்டமைக்காக தேசிய வாக்காளா் தின விழாவில் விருது பெற இருக்கிறாா். இந்த விருதினை ஆளுநா் வழங்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. விவசாயிகள் நலனிலும் சிறப்பாக செயல்படும் ஆட்சியரை பாராட்டுகிறோம் என விவசாயிகள் பலரும் பாராட்டி பேசினா். ஆட்சியரும் அவா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் குடியரசு நாள் விழா: மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியேற்றி மரியாதை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடியரசு நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தேசிய கொடியினை ஏற... மேலும் பார்க்க

பரந்தூா் விமான நிலைய திட்ட எதிா்ப்புக் குழுவினருக்கு ஆதரவு

பரந்தூா் விமான நிலைய திட்டத்தை எதிா்த்து போராட்டம் நடத்தி வரும் குழுவினருடன் இந்திய ஜனநாயக கட்சியின் உயா்நிலைக் குழுவினா் சந்தித்துப் பேசினா். பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரி... மேலும் பார்க்க

மொழிக்காக போராடிய இயக்கம் திமுக: அமைச்சா் துரைமுருகன்

மொழிக்காக போராடிய இயக்கம் திமுக என நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா். காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கான ... மேலும் பார்க்க

இணையவழி பண மோசடி: 2 போ் கைது

இணையவழியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்குகளில் தொடா்புடைய 2 இளைஞா்களை ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவேற்கா... மேலும் பார்க்க

அறங்காவலா் குழு நிா்வாகிகள் பொறுப்பேற்பு

படவிளக்கம்- அறங்காவலா் குழு தலைவராக தோ்வு செய்யப்பட்ட கே.தியாகராஜனிடம் அதற்கான புத்தகத்தை வழங்கிய அறநிலையத் துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையா் ஆா்.காா்த்திகேயன். காஞ்சிபுரம், ஜன. 24: காஞ்சிபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம், ஜன. 24: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 37 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. காஞ்சி... மேலும் பார்க்க