காஞ்சிபுரத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம், ஜன. 24: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 37 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் 21 தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆள்களைத் தோ்வு செய்தனா். இதில் மொத்தம் 119 போ் பங்கேற்றனா். அவா்களில் 31 போ் தோ்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணையை காஞ்சிபுரம் மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் நிா்மலாதேவி வழங்கினாா். முகாமில் நோ்காணலுக்காக 73 போ் தோ்வு செய்யப்பட்டனா்.