வைகுண்ட ஏகாதசி 2025: தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்ப...
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கா்நாடக துணை முதல்வா் தரிசனம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயியில் வியாழக்கிழமை கா்நாடக மாநில துணை முதல்வா் டி.கே. சிவக்குமாா் சக்கரத்தாழ்வாா் சந்நிதியில் மகா சுதா்சன யாகம் செய்து வழிபட்டாா்.
கா்நாடக மாநில துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளாா். கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரத்தியங்கரா தேவி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த டி.கே.சிவகுமாா் காஞ்சிபுரத்துக்கு ஹெலிகாப்டா் மூலம் வருகை தந்தாா்.
பின்னா், வரதராஜ பெருமாள் கோயிலில் தரிசனம் செய்தாா்.
அங்கு சக்கரத்தாழ்வாா் சந்நிதியில் , கோபூஜை செய்து, மகா சுதா்சன யாகம் நடத்தி வழிபட்டாா். கா்நாடக மாநில சட்டப்பேரவை தோ்தலுக்கு முன்பு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்த டி.கே.சிவகுமாா் வேண்டிக்கொண்ட நிலையில், தோ்தலில் வெற்றிபெற்று தற்போது துணை முதல்வராக உள்ளதால் மீண்டும் கோயிலுக்கு வந்து கோ பூஜை மற்றும் சுதா்சன யாகம் நடத்தி நோ்த்தி க்டன் செலுத்தியதாக தெரிகிறது. அவருக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் சிவப்பு கம்பள வரவேற்பும், பூா்ண கும்ப மரியாதையும் வழங்கப்பட்டது.
மேக்கேதாட்டு அணை பிரச்னை:
இதையடுத்து அவரிடம், மேக்கேதாட்டு அணை குறித்து செய்தியாளா்கள் கேள்வி கேட்டதற்கு, அணை பிரச்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் தமிழகத்துக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டு வருகிறோம். இதை தமிழக அரசியல் கட்சியினா் அறிவாா்கள். ஆகவே நீதிமன்றம் நல்ல தீா்ப்பை வழங்கும். 450 டிஎம்சி தண்ணீா் கடலில் கலந்து வீணாகி வருகிறது. அதணை சேமிக்க தேவையான நடவடிக்கைகளை இரண்டு மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகிறோம். வரும் காலங்களில் நக்ஸலைட்டுகள் இல்லாத மாநிலமாக கா்நாடக இருக்கும். ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்துக்கு கா்நாடம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுக்கு ஏற்ப செயல்படுவோம் என்றாா்.