செய்திகள் :

பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை இனியேனும் நெறிமுறைப் படுத்த வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

post image

பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை இனியேனும் நெறிமுறைப் படுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம். புதுப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை இனியேனும் நெறிமுறைப் படுத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அவர் வெளியிட்டுள்ள மற்றொரு எக்ஸ் தளப் பதிவில், சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னையில் ஓடுதளத்திலேயே விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும் , முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும் இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது .

எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கண்டனம்.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உரிய ஆவன செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிவகாசி அருகே பட்டாசு விபத்து: இருவர் பலி!

6.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது: 2 மினி லாரிகள் பறிமுதல்!

கரூர்: கரூரில் 6.5 டன் ரேஷன் அரிசியை கேரளத்துக்குக் கடத்த முயன்ற மூன்று பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 6.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் 2 மினி லாரிகளை பறிமுதல் செய்தனர். கர... மேலும் பார்க்க

விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன்: திருமாவளவன்

விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி திருபுவனையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் விடுதலைச் ச... மேலும் பார்க்க

விஜய் வருகை: தவெகவினர் மீது வழக்கு!

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகையின்போது மக்களை திரட்டி இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தவெக மாவட்டச் செயலாளர் சம்பத் உள... மேலும் பார்க்க

சீறிப் பாயும் காளைகள்: கோவையில் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

கோவையில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியினை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடக்கி வைத்தார். கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் தமிழர் பண்பாட்டு ஜ... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1397 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(ஏப். 27) காலை 3-வது நாளாக 107.76 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 2-வது நாளாக வினாடிக்கு 1397 ... மேலும் பார்க்க

கோடை மழை! இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கோடை வெய்யில் கொளுத்தும் நிலையில், இன்று(ஏப். 27) காலை 10 மணி வரை தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னிய... மேலும் பார்க்க