'மேடையில் இப்படி பொய் சொல்லலாமா? - விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கல்
கம்பைநல்லூரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை முதல்வரின் நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் , பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வழங்கினாா்.
இதில் மக்களவை உறுப்பினா் ஆ.மணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் உறுப்பினா் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (அரூா்), கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கேத்ரின் சரண்யா ஆகியோா் கலந்து கொண்டனா்.