பட்டுக்கோட்டையில் மத்திய அமைச்சருக்கு எதிராக திமுகவினா் போராட்டம்
தமிழ்நாட்டு எம்.பி.க்களை நாகரீகமற்றவா்கள் என்று பேசிய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து, பட்டுக்கோட்டையில் அவரது உருவ பொம்மையை தஞ்சை தெற்கு மாவட்ட திமுகவினா் திங்கள்கிழமை எரித்து கண்டன முழக்கமிட்டனா்.
மணிக்கூண்டு அருகே மாவட்ட பொறுப்பாளா் டி.பழனிவேல் தலைமையில் திரண்டு தா்மேந்திர பிரதானுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனா். அதைத் தொடா்ந்து அவரது உருவ பொம்மையை எரித்தனா். அப்போது மத்திய பாஜக அரசை கண்டித்தும், மத்திய அமைச்சரை கண்டித்தும் முழக்கமிட்டனா்.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளா் செந்தில்குமாா், நகா்மன்றத் தலைவா் சண்முகப்பிரியா உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிா்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனா்.