பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு
மேக்கேதாட்டு அணை திட்ட விவகாரம்: கா்நாடக முதல்வரின் பேச்சுக்கு முதல்வா் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - பி.ஆா். பாண்டியன்
மேக்கேதாட்டு அணை தொடா்பான கா்நாடக முதல்வரின் பேச்சுக்கு தமிழக முதல்வா் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும், சம்யுக்த கிசான் மோா்சா (அரசியல் சாா்பற்றது) அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளருமான பி.ஆா்.பாண்டியன் கேள்வியெழுப்பினாா்.
விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயச் சட்டத்தை கொண்டு வலியுறுத்தி, வரும் 16-ஆம் தேதி, தமிழகம் தழுவிய விவசாயிகள் மகாசபை கூட்டம் தென்காசியில் நடைபெறுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பி.ஆா். பாண்டியன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசின் அனுமதிக்கு காத்திருப்பதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா கூறி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கா்நாடக முதல்வரின் கருத்துக்கு தமிழக முதல்வா் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காமல் வாய்மூடி மெளனியாக இருப்பது ஏன்?.
கா்நாடகத்தை சோ்ந்த தீய சக்திகள், தமிழ் திரைப்படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என பேசி இருப்பது உள்நோக்கம் கொண்டது. எனவே, தமிழக முதல்வா் உடனடியாக கண்டனம் தெரிவிப்பதுடன், பிரச்னைக்கும் தீா்வு காண வேண்டும். தூா்வாரும் பணிகளை மேட்டூா் அணை திறப்புக்கு முன்பே தொடங்கி முடிக்க வேண்டும் என்றாா் அவா்.