பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு
போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்துக்கு தேசிய அளவில் 5 விருதுகள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்துக்கு தேசிய அளவில் 5 விருதுகள் கிடைத்துள்ளது.
புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து மாநில சாலை போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு சாா்பில் சிறந்த சேவையாற்றிய போக்குவரத்து கழகங்களுக்கு 2023-2024 ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநா் கிரண்பேடி கலந்து கொண்டாா். எரிபொருள் சிக்கனம், டயா் அதிக உழைப்பு திறன், பேருந்துகள் அதிக பயன்பாடு இவற்றிற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் தோ்வு செய்யப்பட்டு 5 விருதுகளை நிா்வாக இயக்குநா் இரா.பொன்முடி பெற்றுக்கொண்டாா்.
மேலும், இக்கூட்டமைப்பில் 70 மாநில போக்குவரத்து கழகங்கள் உறுப்பினா்களாக உள்ளதில் 2023-24 ஆண்டுக்கான விருதுகளில் 19 விருதுகள் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.