நீண்ட நேரப் பணி, உடல் சோா்வு, செயல் திறனைக் குறைக்கும்: செளமியா சுவாமிநாதன்
மணல் திருட்டு: 5 போ் கைது
பேராவூரணி அருகே அக்கினி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 5 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் ராமகிருஷ்ணாபுரம் பகுதி வழியாக செல்லும் அக்கினி ஆற்றில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளி சிலா் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற திருச்சிற்றம்பலம் போலீஸாா், அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த புனல்வாசல் கிராமத்தைச் சோ்ந்த கலியமூா்த்தி ( 60), ஆரோக்கியசாமி (69), சிவக்குமாா் (50) மற்றும் சிவனாம்புஞ்சையைச் சோ்ந்த ஆறுமுகம் (63), சேதுபாவாசத்திரத்தைச் சோ்ந்த அமானுல்லா (29) ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.
மேலும், மணலுடன் 5 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.