செய்திகள் :

பணமோசடி வழக்கில் சிக்கிய மகனை பாதுகாக்க சட்டம் பயிலும் 90 வயதான தாய் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

post image

பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கிக்கொண்ட மகனை பாதுகாப்பதற்காக 90 வயதான தாய் ஒருவர் சட்டம் கற்றுக்கொண்ட சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.

ஹீ என்ற 90 வயதான தாய் தனது 57 வயதான மகன் லின்னை பாதுகாக்க முயற்சித்து வருகிறார்.

ஜெஜியாங் மாகாணத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை ஜூலை 30 அன்று கடைசியாக நடைபெற்று இருக்கிறது. லின் உள்ளூர் தொழிலதிபரை மிரட்டி 141 கோடி ரூபாய் ( 117 மில்லியன் யுவான்) பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து தன் மகனைப் பிரிந்து வாடும் ஹீ கடந்த ஆண்டு அவரை பாதுகாக்க சட்டம் பயில முடிவு செய்து இருக்கிறார்.

அவரது வயதை கருத்தில் கொண்டு குடும்பத்தினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தனது முடிவில் ஹீ உறுதியாக இருந்துள்ளார். குற்றவியல் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பற்றிய புத்தகங்களை வாங்கி தானே சட்டம் பயில தொடங்கி இருக்கிறார்.

புத்தகங்கள், இதழ்களை மட்டும் படிப்பதோடு இல்லாமல் வழக்குகள் தொடர்புடைய ஆவணங்களை ஆராய தினமும் நீதிமன்றமும் சென்றிருக்கிறார்.

லின்னை கைவிலங்குகளுடன் நீதிமன்றத்தில் பார்த்தபோது, ஹீ உணர்ச்சிவசப்பட்டு அழுதிருக்கிறார். இதனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது.

மருத்துவர்கள், மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்த போதிலும், தனது மகனின் பக்கத்தில் இருக்க விரும்பிய ஹீ, வெளியேற மறுத்திருக்கிறார். தொடர்ந்து வழக்கு நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Raksha Bandhan: 1500 மாணவிகளின் ராக்கி கயிறுகளால் திகைத்த ஆசிரியர்; வைரல் வாத்தியார் Khan sir யார்?

பீகார் மாநிலம் பாட்னாவில் இயங்கி வருகிறது Khan GS Research Centre. இந்த நிறுவனத்தின் நிறுவனர், இயக்குநர் கஃபைசல் கான், மாணவர்களால் 'கான் சார்' என அழைக்கப்படுகிறார். SSC, Railway, UPSC போன்ற அரசு வேலை ... மேலும் பார்க்க

”விராட் கோலி பேசுறேன்...” சிறுவர்களுக்கு வந்த கிரிகெட் நட்சத்திரங்களின் அழைப்பு - பின்னணி இதுதான்

சர்வதேச கிரிக்கெட் வீரர் ரஜத் பட்டிதாரின் தொலைபேசி எண் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் சிறுவர்களுக்கு சென்றதையடுத்து பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் சத்த... மேலும் பார்க்க

`16 வயதில் மகளுக்கு செக்ஸ் பொம்மை கொடுக்க விரும்பியது ஏன்?’ - நடிகை கெளதமி கபூர் விளக்கம்

தாம்பத்தியம் குறித்து அதிகமான பெற்றோர் தங்களது பிள்ளைகளுடன் பேசுவதில்லை. ஆனால் பாலிவுட் மற்றும் டிவி நடிகை நடிகை கெளதமி கபூர் தனது மகளுடன் இது குறித்து 16வது வயதிலேயே பேசியதாக ரியாலிட்டி ஷோ ஒன்றில் கல... மேலும் பார்க்க

மும்பை: இட்லி கடைக்காரரை உதைத்து மன்னிப்பு கேட்க வைத்த ராஜ் தாக்கரே கட்சியினர் - என்ன பிரச்னை?

மும்பையில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்றும், மராத்திக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்றும் ராஜ் தாக்கரே கூறி வருகிறார். இதனால் மராத்திக்கு எதிராக பேசுபவர்களை அல்லது மராத... மேலும் பார்க்க

Top News: `மாநில கல்விக் கொள்கை டு அன்புமணி பொதுக்குழு கூட்டம்' - ஆகஸ்ட் 8 ரவுண்ட்அப்

ஆகஸ்ட் 8 - முக்கிய செய்திகள்!* ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தைக் காரணம் காட்டி இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்திருக்கும் நிலையில், புதினுடன் இன்று தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, "... மேலும் பார்க்க