பணியின்போது மாரடைப்பால் நடத்துநர் பலி!
திருவெற்றியூர் மாநகரப் பேருந்து நடத்துநர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜா கடையை சேர்ந்தவர் ரமேஷ் - வயது (54). சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து திருவொற்றியூர் வரை தடம் எண் 56சி பேருந்தில், ஓட்டுநர் பாண்டியனும் ரமேஷும் காலை 6 மணியளவில் பயணிகளை ஏற்றுக் கொண்டு வந்த நிலையில், திடீரென ரமேஷுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து, அவரை திருவொற்றியூர் உள்ள ஆகாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக கூறியதையடுத்து, பின்னர் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
நடத்துநர் ரமேஷ் உயிரிழப்பு குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்