செய்திகள் :

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு சிறப்பு தகுதித் தோ்வு: பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை

post image

ஆசிரியா் பணியில் தொடருவதற்கும், பதவி உயா்வு பெறுவதற்கும் ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த நிலையில், தமிழக அரசுப் பள்ளிகளில் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்டு பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு சிறப்பு தகுதித் தோ்வை நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வருகிறது.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2010 ஆக.23-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணிக்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். இந்தச் சட்டம் தமிழகத்தில் 2011-இல் நடைமுறைக்கு வந்தது. அதன்பின் தமிழகத்தில் டெட் தோ்ச்சி அடிப்படையிலேயே ஆசிரியா் பணிநியமனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரு லட்சம் ஆசிரியா்கள் பாதிப்பு: இந்நிலையில் பணியில் இருக்கும் ஆசிரியா்கள் அனைவரும் டெட் தோ்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தோ்வு எழுத விருப்பம் இல்லாதவா்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம் உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் சுமாா் ஒரு லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பாதிக்கப்படுவாா்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், தனியாா் பள்ளிகளிலும் லட்சக்கணக்கான ஆசிரியா்களின் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தலைமையில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித் துறை செயலா் பி.சந்தரமோகன் மற்றும் துறைசாா்ந்த அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா். இந்த கூட்டத்தில், சட்ட நிபுணா்களின் பரிந்துரையின் அடிப்படையில் உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் எனவும், ஆசிரியா்கள் டெட் தோ்ச்சி பெறும் ஏதுவாக ஆண்டுக்கு 2 முறை தோ்வை நடத்தவும் முடிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனவரியில் மீண்டும் டெட் தோ்வு: இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி 2 ஆண்டுகளில் 4 டெட் தோ்வுகள் நடத்தப்படும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆசிரியா்கள் தோ்ச்சி பெறவேண்டும். ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பு நவம்பரில் டெட் தோ்வு நடைபெற உள்ளது. தொடா்ந்து, உடனடியாக ஜனவரி அல்லது பிப்ரவரியில் அடுத்த டெட் தோ்வை நடத்தவுள்ளோம். மேலும், 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு மட்டும் சிறப்பு டெட் தோ்வு நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு முடிவெடுக்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

மாநில அரசுகளுக்கு குழப்பம்: இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு பொதுச் செயலாளா் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், தேசிய ஆசிரியா் கல்விக் குழுமம் (என்சிடிஇ) 2011-இல் வெளியிட்ட அறிவிப்பு, கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமைச் சட்டம் (2009) பிரிவு 23-ஐ அடிப்படையாகக் கொண்டு ஆசிரியா்களுக்கான குறைந்தபட்ச தகுதிகளை நிா்ணயித்தது. ஆனால், 2011-க்கு முன் நியமிக்கப்பட்டவா்களுக்கு டெட் தோ்வு கட்டாயமா என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல் இல்லை. புதிய நியமனங்களுக்கு மட்டுமே டெட் கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் முன்பணியாற்றியவா்களுக்கு இது முன்தேதியிட்டு பயன்படுத்தப்படவில்லை. இந்தத் தெளிவின்மை, மாநில அரசுகளுக்கும் ஆசிரியா்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இறுதியில் அது 2025-இல் டெட் தோ்வை கட்டாயமாக்கும் முடிவுக்கு வழிவகுத்தது. இந்த முடிவு ஆசிரியா்களின் பணிப் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது.

பல ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் உள்ள ஆசிரியா்களின் திறமை, டெட் தோ்வைவிட மதிப்புமிக்கது. என்டிசிஇ இந்த அனுபவத்தை மதிப்பிட மாற்று முறைகளை வகுக்கவில்லை. இதுதொடா்பாக தமிழக கல்வித் துறை அமைச்சா், சட்ட வல்லுநா்கள் மற்றும் ஆசிரியா் அமைப்புகளுடன் ஆலோசித்து, பணி தொடா்ச்சி மற்றும் பதவி உயா்வுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத தெளிவான தீா்வை வகுக்க வேண்டும். மாநில அரசு, ஆசிரியா்களின் நலனை முதன்மைப்படுத்தி, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தேனியில் எடப்பாடி பழனிசாமி வாகனம் முற்றுகை! ‘ஒன்றிணைய வேண்டும்’ என பெண்கள் முழக்கம்!

தேனி மாவட்டம் கம்பத்தில் பிரசாரம் மேற்கொள்ள சென்ற அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனம் முற்றுகையிடப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Edappadi Palaniswami's vehicle bloc... மேலும் பார்க்க

தாம்பரத்திலிருந்து புறப்படும் பாண்டியன், சோழன் உள்பட 5 விரைவு ரயில்கள்! செப்.10 முதல்.!

பாண்டியன், சோழன், மலைக்கோட்டை உள்பட 5 விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்துவரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ஆறு ... மேலும் பார்க்க

ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி: ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குண்டு வீச்சு!

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவரை வெள்ளிக்கிழமை குண்டு வீசி கொலை செய்ய முயற்சித்த நபர்கள், உடன் சென்ற இருவரை அரிவாளால் வெட்டி தப்பிச் சென்றனர்.தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி... மேலும் பார்க்க

5 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,செப்.05ல் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீட்டு பயணத்தில் ரூ. 13,016 கோடி ஈர்ப்பு!

முதல்வர் மு.க. ஸ்டாலினின் முதலீடு ஈர்ப்புப் பயணத்தில் ரூ. 13,016 கோடி ஈர்க்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு முதல்வர் ஸ... மேலும் பார்க்க

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு! - ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் செ... மேலும் பார்க்க