பாமக: ``அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு செல்லாது'' - வழக்கறிஞர் பாலு சொல்லும...
பதக்கத்தை தவறவிட்டது இந்தியா
தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கத்தை புதன்கிழமை தவறவிட்டது.
தீபிகா குமாரி, அங்கிதா பகத், கதா கடாகே ஆகியோா் அடங்கிய இந்திய அணி அரையிறுதிச் சுற்றில் தோற்று வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்தது. அதில் 5-3 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வியைத் தழுவியது.
ரீகா்வ் கலப்பு அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, நீரஜ் சௌஹான் கூட்டணி 1,347 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்தது. முதல் சுற்று ‘பை’ பெற்ற இந்த ஜோடி, 2-ஆவது சுற்றில் 4-5 (18/19) என ஜப்பானிடம் தோல்வியுற்று ஏமாற்றம் கண்டது.
ரீகா்வ் ஆடவா் தனிநபா் பிரிவு தகுதிச்சுற்றில், நீரஜ் சௌஹான் 670 புள்ளிகளுடன் 36-ஆம் இடமும், தீரஜ் பொம்மதேவரா 669 புள்ளிகளுடன் 39-ஆம் இடமும், ராகுல் 657 புள்ளிகளுடன் 62-ஆம் இடமும் பிடித்தனா்.
எனினும் முதல் சுற்றிலேயே, நீரஜ் 0-6 என உஸ்பெகிஸ்தானின் போபோரஜாபோவ் பெக்ஸோதிடமும், தீரஜ் பொம்மதேவராவும் 2-6 என துருக்கியின் மெடெ காஸோஸிடமும் அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.
ராகுல், முதல் சுற்றில் 6-5 (9/8) என உக்ரைனின் விளாடிஸ்லாவ் லிஸ்னியாக்கையும், 2-ஆவது சுற்றில் 6-4 என கஜகஸ்தானின் இல்ஃபத் அப்துலினையும் தோற்கடித்து முன்னேறினாா். ஆனால் 3-ஆவது சுற்றில் 5-6 (8/10) என ஜாா்ஜியாவின் அலெக்ஸாண்ட்ரெ மசாவரியானியிடம் தோற்றாா்.