செய்திகள் :

பத்திரிகையாளர் குடும்பநல நிதித் தொகை உயர்வு!

post image

பத்திரிகையாளர் குடும்பநல நிதித் தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழக அரசின் பரிசீலனைக்குப்பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது, பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும்போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.10,00,000/- (ரூபாய் பத்து லட்சம் மட்டும்) என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும்போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ. 7,50,000/- (ரூபாய் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும்போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) என்றும், 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும்போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.2,50,000/- (ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும் நடைமுறையிலுள்ள விதிகளின்படி, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிடுகிறது.

இதையும் படிக்க: வனுவாடூ தீவில் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்! மீட்புப் பணியில் ஆஸ்திரேலிய குழு

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தில் உதவி பெற உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையினைப் பெற்று இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழுவே இத்திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களையும் பரிசீலிக்கும். அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆணைகள் வெளியிடப்படும்.

இத்திட்டத்திற்கான செலவினங்கள் "முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில்" இருந்து வழங்கப்படும். இக்குடும்ப உதவி நிதி திட்டம் அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் அமல்படுத்தப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் புதிய மாநில செயலாளர்! யார் இந்த பெ. சண்முகம்?

விழுப்புரத்தில் நடைபெற்று முடிந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டில் அந்த கட்சியின் மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் கட்சி த... மேலும் பார்க்க

கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் காலண்டர் வெளியீட்டு விழா!

கோவை: கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான காலண்டர், டைரி வெளியீட்டு விழா மற்றும் பொங்கல் விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.கோவை ஆவாரம்பாளையம் எஸ்என்ஆர் கல்லூரி வளாகத்தில் ந... மேலும் பார்க்க

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வாழ்த்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகத்துக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் நடைபெற்று முடிந்த... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழகத்தின் டீன்கள், துறை தலைவர்களுக்கு அதிரடி சுற்றறிக்கை!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் டீன்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு பல்கலைக்கழக பதிவாளர் சுற்... மேலும் பார்க்க

சிந்துவெளி பண்பாட்டின் எழுத்துமுறையை புரிந்துகொள்ள வழிவகை செய்தால் ரூ.8.57 கோடி பரிசு: முதல்வர் அறிவிப்பு

சிந்துவெளி பண்பாட்டின் எழுத்துமுறையை புரிந்துகொள்ள வழிவகை செய்தால், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 8.57 கோடி) பரிசாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசி... மேலும் பார்க்க

தமிழக அரசின் விருதுகளை பெற உள்ள ஆளுமைகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

சென்னை: சமூகம், பொருளாதாரம், அரசியல், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, வரலாறு என பல்வேறு தளங்களில் தங்களின் தனித்த முத்திரையை பதித்து தமிழக அரசின் விருது பெறுபவா்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில ச... மேலும் பார்க்க