செய்திகள் :

சிந்துவெளி பண்பாட்டின் எழுத்துமுறையை புரிந்துகொள்ள வழிவகை செய்தால் ரூ.8.57 கோடி பரிசு: முதல்வர் அறிவிப்பு

post image

சிந்துவெளி பண்பாட்டின் எழுத்துமுறையை புரிந்துகொள்ள வழிவகை செய்தால், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 8.57 கோடி) பரிசாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். மேலும், சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பினை உலகுக்கு அறிவித்த முன்னாள் இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷல் திருவுருச்சிலைக்கு அடிக்கல் நாட்டியும், சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்: ஒரு வடிவவியல் ஆய்வு என்ற நூலினை வெளியிட்டும் விழாப் பேருரையாற்றினார்.

அப்போது, தொல்லியல் துறையின் ஆய்வுகளுக்கு வேகத்தையும் ஊக்கத்தையும் வழங்கும் வகையில் முத்தாய்ப்பாக மூன்று அறிவிப்புகளை வெளியிட்டார்.

சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்து முறையை தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் வழிவகையைக் கண்டறியும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 8.57 கோடி) பரிசாக வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்து ஆய்வு மையமும் இணைந்து மேற்கொள்ளும் வகையில், சிந்துவெளி பண்பாடு குறித்தான ஆராய்ச்சிக்கு அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கும் பொருட்டு ரூ. 2 கோடி நிதி நல்கை வழங்கப்படும்.

இதையும் படிக்க |காங்கிரஸ் முதலில் ஹேம மாலினியிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்: பாஜக வேட்பாளர் கருத்து!

தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகம் அறிந்து கொள்ளும் வகையில் அயராது உழைக்கும் தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி கல்வெட்டியல் ஆய்வாளர்கள் மற்றும் நாணயவியல் வல்லுநர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த மூன்று அறிவிப்புகளும் இந்தத் துறை ஆய்வுகளுக்கு வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்கும் என்று நான் நம்புகிறேன்.

சிந்துவெளி முதல் கீழடி வரை தமிழினத்தின் பெருமை நிரம்பி இருக்கிறது. பாவாணர், ராசமாணிக்கனார், க.த.திருநாவுக்கரசு போன்ற மாபெரும் அறிஞர்கள் எல்லாம் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். 'சிந்து முதல் வைகை வரை' என்ற நூலை நம்முடைய ஆர்.பாலகிருஷ்ணன் எழுதி இருக்கிறார். டோனி ஜோசப் மரபணு, மானுடவியல் சார்ந்த ஆய்வுகளை வைத்து நிறைய எழுதிக்கொண்டு வருகிறார். இன்னும் ஏராளமான ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன.

அறிவியல் முறைப்படி சான்றுகள் அடிப்படையில், தமிழ்ச் சமூகத்தின் தொன்மையை அறிவுலகம் இப்போது ஏற்றுக்கொள்ளத் தொடங்கி இருக்கிறது. இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தமிழைத் தவிர்த்துவிட்டு இனி எழுதமுடியாது என்று நாம் உரக்கச் சொல்வோம். ஜான் மார்ஷலின் கண்டுபிடிப்பின் நூற்றாண்டில் அவருக்கு நாம் நன்றியை உரித்தாக்கி, அவர் விட்டப் பணியை நாம் தொடர்வோம் என முதல்வர் கூறினார்.

யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

பொங்கல் உள்ளிட்ட நாள்களில் நடைபெறும் யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றியமைக்க மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளி... மேலும் பார்க்க

ஆளும் கட்சிக்கு மட்டும் போராட்டத்துக்கு அனுமதியா? - தமிழிசை கேள்வி

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு மட்டும் போராட்டத்துக்கு அனுமதியா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப் பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, திங்கள்க... மேலும் பார்க்க

யுவன் குரலில் வெளியான அகத்தியா பட பாடல்!

நடிகர்கள் ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள அகத்தியா படத்தின் முதல் பாடல் யுவன் சங்கர் ராஜா குரலில் வெளியாகியுள்ளது.பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் பிரதான பாத்திரங... மேலும் பார்க்க

ஜி.வி. பிரகாஷ் குமாரின் கிங்ஸ்டன்: டீசர் எப்போது?

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகிவரும் கிங்ஸ்டன் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி -... மேலும் பார்க்க

அசாம்: 2023 ஆண்டு முதல் 21 தீவிரவாதிகள் கைது!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 21 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் சிறப்பு காவல் அதிரடிப்படை தெரிவித்துள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ... மேலும் பார்க்க

ரோஜா - 2 தொடரில் சுந்தரி சீரியல் நடிகர்!

ரோஜா - 2 தொடரில் சுந்தரி சீரியல் நடிகர் ஜிஷ்ணு மேனன் இணைந்துள்ளார்.சன் தொலைக்காட்சியில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா' தொடர், கடந்த 2022 டிசம்பரில் நிறைவு பெற்றது.இத்தொடர... மேலும் பார்க்க