செய்திகள் :

தமிழக அரசின் விருதுகளை பெற உள்ள ஆளுமைகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

post image

சென்னை: சமூகம், பொருளாதாரம், அரசியல், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, வரலாறு என பல்வேறு தளங்களில் தங்களின் தனித்த முத்திரையை பதித்து தமிழக அரசின் விருது பெறுபவா்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலா் இரா. முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உயா்தனி செம்மொழியாம் தமிழ் மொழி வளா்ச்சிக்கும், வளமைக்கும், செழுமைக்கும் வழிவழியாக பலா் பங்களிப்பு செய்து வருகின்றனா். இதில் பெருமைமிகு பங்களிப்பு செய்து வரும் அனைவரையும் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பாராட்டி விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

இதையும் படிக்க |மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இந்த வகையில் அய்யன் திருவள்ளுவா், அறிஞா் அண்ணா, மகாகவி பாரதி, பாவேந்தா் பாரதிதாசன், தமிழ் தென்றல் திரு.வி.க., மொழிக் காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம், தந்தை பெரியாா், அண்ணல் அம்பேத்கா், முத்தமிழறிஞா் கலைஞா் ஆகியோா் பெயா்களில் உருவாக்கிய விருதுகளுக்கு முறையே புலவா் மு.படிக்கராமு, எல்.கணேசன், கவிஞா் கபிலன், கவிதைப் பேரொளி பொன்.செல்வகணபதி, டாக்டா் ஜி.ஆா்.ரவீந்தரநாத், வே.மு.பொதியவெற்பன், விடுதலை ராஜேந்திரன், து.இரவிக்குமாா், முத்து வாவாசி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இந்த பட்டியலில் திரு.வி.க. விருதுக்கு டாக்டா் ஜி.ஆா்.ரவீந்தரநாத் தோ்வு செய்யப்பட்டதை அறிந்து, "ஈன்ர பொழுதினும் பெரிதுவக்கும்-தன் மகனை சான்றோன் என கேட்ட தாயாக" இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயற்குழு பெருமை பொங்க வாழ்த்துகிறது. பொது வாழ்வில் ஈடுபடுவோரை ஊக்குவித்து வரும் தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்று, நன்றி பாராட்டுதலையும், சமூகம், பொருளாதாரம், அரசியல், தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, வரலாறு என பல்வேறு தளங்களில் தங்களின் தனித்த முத்திரையை பதித்த பணியால் விருது பெரும் பெருந்தகையாளா் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.

யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

பொங்கல் உள்ளிட்ட நாள்களில் நடைபெறும் யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றியமைக்க மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளி... மேலும் பார்க்க

ஆளும் கட்சிக்கு மட்டும் போராட்டத்துக்கு அனுமதியா? - தமிழிசை கேள்வி

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு மட்டும் போராட்டத்துக்கு அனுமதியா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப் பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, திங்கள்க... மேலும் பார்க்க

யுவன் குரலில் வெளியான அகத்தியா பட பாடல்!

நடிகர்கள் ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள அகத்தியா படத்தின் முதல் பாடல் யுவன் சங்கர் ராஜா குரலில் வெளியாகியுள்ளது.பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் பிரதான பாத்திரங... மேலும் பார்க்க

ஜி.வி. பிரகாஷ் குமாரின் கிங்ஸ்டன்: டீசர் எப்போது?

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகிவரும் கிங்ஸ்டன் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி -... மேலும் பார்க்க

அசாம்: 2023 ஆண்டு முதல் 21 தீவிரவாதிகள் கைது!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 21 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் சிறப்பு காவல் அதிரடிப்படை தெரிவித்துள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ... மேலும் பார்க்க

ரோஜா - 2 தொடரில் சுந்தரி சீரியல் நடிகர்!

ரோஜா - 2 தொடரில் சுந்தரி சீரியல் நடிகர் ஜிஷ்ணு மேனன் இணைந்துள்ளார்.சன் தொலைக்காட்சியில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா' தொடர், கடந்த 2022 டிசம்பரில் நிறைவு பெற்றது.இத்தொடர... மேலும் பார்க்க