யாா் வந்தாலும் முதல்வரை அசைத்துப் பாா்க்க முடியாது: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி
பத்து கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
அரியலூா் மாவட்டத்தில் உள்ள பத்து கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியலூா் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்யும் வகையில், திருமழபாடி, ஏலாக்குறிச்சி, செங்கராயன்கட்டளை, வடுகபாளையம், கா.மாத்தூா், கண்டராதித்தம், குலமாணிக்கம், மஞ்சமேடு, இலந்தைக்கூடம், அழகியமணவாளன் ஆகிய கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
எனவே, விவசாயிகள் தங்களது வயல் சிட்டாவை அந்தந்த நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்தும், வங்கி கணக்கு எண்ணை வழங்கி, சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,545, பொது ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என விற்பனை செய்து பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.