மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
‘தாட்கோ’ திட்டங்களில் மானியத்துடன் கடனுதவி எஸ்.சி, எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம்
தாட்கோ வாழ்வாதார திட்டத்தில் மானியத்துடன் கடனுதவி பெற விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் தொழில் முனைவு திட்டம் உள்ளிட்ட வாழ்வாதார திட்டங்களில், மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரா்கள், தமிழ்நாடு அரசு இ-சேவை மையத்தில் எளிய முறையில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரா்கள் இணையதளம் மற்றும் மாவட்ட மேலாளா் அலுவலகம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனா்.
இதை மேலும், எளிமைப்படுத்தும் வகையில் அந்தந்த பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா்களுக்கு அருகாமையில் இருக்கும் இ-சேவை மையத்தின் வாயிலாக தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் இங.அதஐநஉ, டங-அஒஅவ மற்றும் நன்னிலம் மகளிா் நில உடைமை திட்டங்களில் விண்ணப்பம் செய்ய ஆவணம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா், தாட்கோ அலுவலகம், அறை எண். 225, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூா் என்ற முகவரியிலும், 04329-228315 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புக் கொண்டு பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.