அரியலூரில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்
அரியலூா் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்கள் மற்றும் மருத்துவ பணியாளா்கள் உள்ளிட்ட 10 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
முன்னதாக, கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார மையங்களில் கட்டமைப்பை மேம்படுத்துவது, பொது மக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளும் தடையின்றி வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட சுகாதார அலுவலா் மணிவண்ணன், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துக்கிருஷ்ணன், குடும்ப நல துணை இயக்குநா் ஜெயந்தி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மற்றும் வட்டார மருத்துவா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.