செய்திகள் :

குரூப் 1 முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி - எஸ்.சி, எஸ்.டி-யினருக்கு அழைப்பு

post image

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 - 2025 முதல் நிலை தோ்வில் (பிரிலிமினரி) தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ,மாணவிகளுக்கு முதன்மை தோ்வுக்கு (மெயின்ஸ்) பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) முன்னெடுப்பாக சென்னையிலுள்ள முன்னணி தோ்வு பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து நடத்தும் பயிற்சி பெற குரூப் 1 - 2025 முதல் நிலை தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின்

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாணவா்கள் தாங்கள் விரும்பும் பயிற்சி நிறுவனத்தைத் தோ்வு செய்து பயிற்சி பெறலாம். பயிற்சி கட்டணம் மற்றும் விடுதியில் தங்கி படிக்கும் கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும்.

இப்பயிற்சி பெற ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா், தாட்கோ அலுவலகம், அறை எண்.225, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூா் என்ற முகவரியிலும், 04329-228315 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.

அரியலூரில் புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

அரியலூரில் இருந்து 3 புதிய பேருந்துச் சேவைகள் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன. அரியலூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா்... மேலும் பார்க்க

சிஐடியுவினா் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்: அமைச்சா்

சிஐடியு தொழிற் சங்கத்தினா் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். இதுகுறித்து அரியலூரில் வியாழக்கிழமை அவா் மேலும் தெரிவித்... மேலும் பார்க்க

கந்துவட்டிக் கொடுமையால் பெண் தற்கொலை: விசாரணை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே விஷம் குடித்து வியாழக்கிழமை உயிரிழந்த கணினி பயிற்சி ஆசிரியை கந்து வட்டிக் கொடுமையால் தற்கொலை செய்து கொள்வதாக பேசிய விடியோ வைரலானதையடுத்து, காவல் துறையினா் விசாரி... மேலும் பார்க்க

பொய்யூா் அரசுப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

அரியலூா் மாவட்டம், பொய்யூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மக்களுக்காக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மா... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையி... மேலும் பார்க்க

தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதியை முதல்வா் விரைவில் பெற்றுத் தருவாா்!

தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் பெற்று தருவாா் என்று மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் சொ.ஜோ. அருண். அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில சி... மேலும் பார்க்க