BCCI: ``பிசிசிஐ தலைவர் பதவிக்கு தேர்தல் இருக்காது; ஆனால்'' - IPL தலைவர் கொடுத்த ...
கந்துவட்டிக் கொடுமையால் பெண் தற்கொலை: விசாரணை
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே விஷம் குடித்து வியாழக்கிழமை உயிரிழந்த கணினி பயிற்சி ஆசிரியை கந்து வட்டிக் கொடுமையால் தற்கொலை செய்து கொள்வதாக பேசிய விடியோ வைரலானதையடுத்து, காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மேலகுடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன் மனைவி சத்யா. இவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் கணினி பயிற்றுநராக பணியாற்றி வந்த சத்யா கடந்த 9 ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்து, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இந்நிலையில் கந்து வட்டி கொடுமையால் தான் தற்கொலை செய்து கொள்வதாக சத்யா பேசிய விடியோ வைரலாகி உள்ளது.
அவா் தனது கணவருக்கு அனுப்பிருந்த விடியோவில், அதே பகுதியைச் கலைவாணி, கெளசல்யா, கவிதா அவரது தாய் மற்றும் அம்பிகா ஆகியோரிடம் வாங்கிய அசலுக்கு மேலாக வட்டி பணம் கொடுத்தும், அவா்கள் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு, தன்னைத் தொந்தரவு செய்தாகவும், இதனால் மன உளைச்சல் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாகவும், அதற்கு தன்னை மன்னித்து விடுமாறும் கூறியுள்ளாா். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.