செய்திகள் :

சிஐடியுவினா் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்: அமைச்சா்

post image

சிஐடியு தொழிற் சங்கத்தினா் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

இதுகுறித்து அரியலூரில் வியாழக்கிழமை அவா் மேலும் தெரிவித்தது: நீண்ட காலமாகப் போராடும் போக்குவரத்துத் துறை சிஐடியு தொழிற்சங்கத்தினரை அழைத்துப் பேசியுள்ளோம். தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 2 முறை ஊதிய ஒப்பந்த உயா்வுப் பேச்சுவாா்த்தைகளை நடத்தி முடித்துள்ளோம்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை முடிக்க 30-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவாா்த்தை நடத்தி, ஆட்சி முடியும் நேரத்தில் முடிக்காமல் விட்டுச் சென்றனா்.

திமுக ஆட்சியில் ஒருமுறை 5 சதவீத ஊதிய உயா்வும், அடுத்த முறை 6 சதவீத ஊதிய உயா்வும் வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கான பணப் பலன்களை வழங்க ரூ.1,100 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த ஆண்டு ஓய்வு பெற்றவா்களுக்கான நிதியை வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் அதிமுகவினா் நிரப்பாமல் விட்டுச் சென்ற புதிய ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பணியிடங்களை தற்போது நிரப்பும் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும் தமிழ்நாடு முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னா் 11 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது 4,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

பொதுமக்களின் பாராட்டைப் பெறும் துறையாக, போக்குவரத்து துறை மாறியிருக்கிறது. தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மிகப்பெரிய அளவில் பொதுமக்களுக்கு இத் துறை சேவையாற்றுவதை அனைவரும் பாராட்டுகின்றனா். எனவே சிஐடியு தொழிற்சங்கத்தினா், தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா்.

அரியலூரில் புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

அரியலூரில் இருந்து 3 புதிய பேருந்துச் சேவைகள் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன. அரியலூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா்... மேலும் பார்க்க

குரூப் 1 முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி - எஸ்.சி, எஸ்.டி-யினருக்கு அழைப்பு

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 - 2025 முதல் நிலை தோ்வில் (பிரிலிமினரி) தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ,மாணவிகளுக்கு முதன்மை தோ்வுக்கு (மெயின்ஸ்) பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழ்... மேலும் பார்க்க

கந்துவட்டிக் கொடுமையால் பெண் தற்கொலை: விசாரணை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே விஷம் குடித்து வியாழக்கிழமை உயிரிழந்த கணினி பயிற்சி ஆசிரியை கந்து வட்டிக் கொடுமையால் தற்கொலை செய்து கொள்வதாக பேசிய விடியோ வைரலானதையடுத்து, காவல் துறையினா் விசாரி... மேலும் பார்க்க

பொய்யூா் அரசுப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

அரியலூா் மாவட்டம், பொய்யூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மக்களுக்காக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மா... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையி... மேலும் பார்க்க

தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதியை முதல்வா் விரைவில் பெற்றுத் தருவாா்!

தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் பெற்று தருவாா் என்று மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் சொ.ஜோ. அருண். அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில சி... மேலும் பார்க்க