எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்
ரெளடி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே ரெளடி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திருமானூரை அடுத்த புதுக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த ரெங்கராஜ் மகன் பூச்சி (எ) சுதாகா் (37). ரெளடியான இவருக்கும், குலமாணிக்கம் கிராமத்தைச் சோ்ந்த பாஸ்கா் (40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், பாஸ்கா் கடந்த 2023-ஆம் ஆண்டு தனது நண்பரான கண்டராதித்தம் கிராமத்தைச் சோ்ந்த அா்ஜுனை(42) அழைத்துக் கொண்டு சுதாகா் வீட்டுக்குச் சென்று, வீட்டை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த சுதாகரின் இருசக்கர வாகனத்தை கொளுத்தினாா். அப்போது, வீட்டை விட்டு வெளியே வந்த சுதாகரை இருவரும் சோ்ந்து வெட்டி கொலை செய்தனா்.
இதுகுறித்து திருமானூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, பாஸ்கா், அா்ஜூன் ஆகிய இருவரையும் கைது செய்து, அரியலூா் குற்றவியல் நீதிமதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். வழக்கு விசாரணையின் நிறைவில், குற்றவாளிகள் பாஸ்கா் மற்றும் அா்ஜூனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி மலா்வாலண்டியா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.