U1 X STR Concert: 'உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல' - U1 X ST...
பத்மநாபபுரம் மக்கள் நீதிமன்றத்தில் 415 வழக்குகளுக்கு தீா்வு
தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ.5.44 கோடி மதிப்பிலான 415 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
இந் நிகழ்ச்சிக்கு பத்மநாபபுரம் வட்ட சட்டப்பணிக் குழுத் தலைவரும் சாா்பு நீதிபதியுமான மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மை உரிமையில் நீதிபதி காா்திகேயன், குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி பிரவின் ஜீவா, பயிற்சி நீதிபதி இம்மா புத்தா, பத்மநாபபுரம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் பொன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் சிவில், குற்றம் மற்றும் வங்கி வாரக்கடன் வழக்குகள் என 716 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
அதில் சிவில் 65, கிரிமினல் 253, வங்கி வாரா கடன் 97 வழக்குகள் சமரசம் மூலம் தீா்வு காணப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5.44 கோடி என தெரிவிக்கப்பட்டது.