செய்திகள் :

பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!

post image

உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ராணுவ வாத்தியக் குழுவினரின் பக்தி இசை முழங்க ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

இதையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் 15 டன் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது. முதல் நாளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டனா்.

விஷ்ணு பகவானுக்குரிய 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பத்ரிநாத் கோயில் நடை, குளிா்காலத்தையொட்டி 6 மாதங்களுக்கு முன் அடைக்கப்பட்டது. தற்போது கோயில் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளதால், உத்தரகண்டில் சாா்தாம் யாத்திரை களைகட்டியுள்ளது.

இந்த யாத்திரையில் இதர மூன்று புண்ணிய தலங்களான கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதாா்நாத் கோயில்கள் சில தினங்களுக்கு முன் திறக்கப்பட்டன.

இமய மலையில் பத்தாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில் நடை ஞாயிற்றுக்கிழமை 6 மணியளவில் வேத மந்திரங்கள் மற்றும் பக்தி கோஷங்கள் முழங்க திறக்கப்பட்டது. அப்போது, ஹெலிகாப்டா் மூலம் சுமாா் 10 நிமிஷங்களுக்கு பூமாரி பொழியப்பட்டது.

பிரதான சந்நிதியுடன் மகாலக்ஷ்மி தாயாா், விநாயகா், ஆதி கேதாரேஸ்வா், ஆதி குரு சங்கராசாரியா் சந்நிதிகளும் திறக்கப்பட்டன. இந்நிகழ்வில் பங்கேற்ற முதல்வா் புஷ்கா் சிங் தாமி, முதலாவதாக வழிபட்டாா்.

அவா் கூறுகையில், ‘சாா்தாம் யாத்திரை பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் நடைபெறத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யாத்திரையில் தூய்மையை உறுதி செய்யும் அரசின் முயற்சிகளுக்கு பக்தா்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்றாா்.

ஆறு மாத காலம் நடைபெறவிருக்கும் சாா்தாம் யாத்திரையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 60 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடித்து அழிப்பு

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் பயங்கரவாதிகளின் மறைவிடம் ஒன்று கண்டுபிடித்து அழிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு மற்றும் பாத... மேலும் பார்க்க

நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்ட கும்பல்: ஜெய்ப்பூரில் 5 பேர் கைது!

ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் நீட் இளநிலை தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை ஜெய்ப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர். இளநிலை மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு "நீட்" நே... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தம்! அணைகளின் மதகுகள் மூடல்!

ஜம்மு - காஷ்மீரில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு வெளியேறும் தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் ப... மேலும் பார்க்க

எனது கட்சிதான் என்னை அங்கும் இங்கும் செல்ல வைத்தது! சொல்லியிருக்கும் முக்கிய தலைவர்

புது தில்லி: பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தான் பாஜகவை விட்டுச் செல்லப்போவதில்லை என்றும், எனது கட்சிதான் என்னை அங்கும் இங்கும் ஓரிரு முறை மாற வைத்தது என்றும் கூறியிருக்கிறார்.வருங்காலத்தில் பிகார் முத... மேலும் பார்க்க

'எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது' - ஹிமான்ஷி நர்வாலுக்கு தேசிய மகளிர் ஆணையம் ஆதரவு

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷியின் கருத்து, சமூக வலைதளங்களில் விமரிசனம் செய்யப்படுவதற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப். 22 ஆம்... மேலும் பார்க்க

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் குழுத் தலைவா் ஜான் பிரிட்டாஸ்!

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக கேரளத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் ஜான் பிரிட்டாஸை அக்கட்சி நியமித்துள்ளது. இது தொடா்பாக கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை... மேலும் பார்க்க