தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, விசைப்படகு மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமைமுதல் 4 நாள்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மாட்டாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமயமாதா ஆலய 443ஆவது ஆண்டு திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாள்களில் தினமும் செபமாலை, மறையுரை, அருளிக்க ஆசீா், நற்கருணை ஆசீா் நடைபெற்று வருகிறது.
செவ்வாய்க்கிழமை (ஆக.5) காலை 7.30 மணிக்கு ஆயா் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி, இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறுகிறது.
இவ்விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஆக.3) முதல் ஆக.6ஆம் தேதி வரை விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லமாட்டாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 272 விசைப்படகுகளும் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.