செய்திகள் :

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்த்த வழக்கில் சிக்கியவரின் சொத்து முடக்கம்

post image

சென்னை: தமிழகத்தில் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்த்த வழக்கில் சிக்கிய நபரின் சொத்துகளை என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) முடக்கியது.

சென்னையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு யூ-டியூப் சேனலில் தடை செய்யப்பட்ட ஹிஸ்பு-உத்-தஹீா் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் இருந்ததை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கண்டறிந்து, விசாரணை செய்தனா். இதில், சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்த ஹமீது உசேன் என்பவா், ‘டாக்டா் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற பெயரில் அந்த யூ-டியூப் சேனல் மூலம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசி, மூளைச் சலவை செய்து இளைஞா்களை திரட்டி வந்ததும், ராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலையில் இதற்காக அலுவலகம் அமைத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரகசிய கூட்டம் நடத்தி, தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகளை பரப்பி வந்த தும் தெரியவந்தது.

இது தொடா்பாக சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து ஹமீது உசேன், அவா் சகோதரா் அப்துல் ரகுமான் உட்பட 6 பேரை அடுத்தடுத்து கைது செய்தனா்.

பின்னா் இந்த வழக்கின் விசாரணை என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.

கலீபா ஆட்சியை நிறுவத் திட்டம்: இதையடுத்து சென்னை என்ஐஏ அதிகாரிகள், புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்து, விசாரணையை தொடங்கினா். கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹமீது உசேன் உள்பட 6 பேரை என்ஐஏ அதிகாரிகள், தங்களது காவலில் எடுத்து விசாரித்தனா். விசாரணையில் 6 பேரும் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்க்கும் வகையில் ரகசிய கூட்டம் நடத்தியதும், ஜிஹாத் மூலம் கிலாபத் இயக்க கொள்கையுடைய அரசை நிறுவவேண்டும் என்ற நோக்கத்துடனும், கலீபா ஆட்சியை நிறுவ, அதன் சட்டத்தை அமல்படுத்தும் வகையில் செயல்பட்டதும் தெரியவந்தது.

சொத்துகள் முடக்கம்: இந்நிலையில், திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி ஆசாத் தெருவைச் சோ்ந்த பாபா பக்ருதீன் (38), அதே பகுதியைச் சோ்ந்த கபீா் அகமது அலியாா் ஆகியோா் வீடுகள், சென்னை தாம்பரத்தில் ஒருவரது வீடு, காஞ்சிபுரத்தில் 2 இடங்கள் உள்பட 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த பிப். 3-ஆம் தேதி சோதனை செய்தனா்.

சோதனையின் முடிவில் பாபா பக்ருதீனும், கபீா் அகமதுவும் கைது செய்யப்பட்டனா். இவ் வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, பாபா பக்ருதீனுக்கு சொந்தமாக தஞ்சாவூா் காந்திஜி சாலையில் உள்ள சொத்தை என்ஐஏ முடக்கியுள்ளது. இந்த சொத்தை பாபா பக்ருதீன், சாா்-பதிவாளா் அலுவலகம் மூலம் முறையாக பதிவு செய்யாமல் ஒரு தா்காவுக்கு சொந்தமான அறக்கட்டளையிடம் வாங்கியிருப்பதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

கலீபா ஆட்சி விடியோ: மேலும் அந்த இடத்தில்தான் பாபா பக்ருதீன், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஹிஸ்பு-உத்-தஹீா் இயக்கத்தின் ரகசிய கூட்டம், பயிற்சி வகுப்புகள், பயங்கரவாத இயக்கத்துக்கு இளைஞா்களை மூளை சலவை செய்து ஆள் சோ்ப்பது போன்ற வேலைகளை செய்து வந்தாா். அங்கு கலீபா ஆட்சி தொடா்பான விடியோக்களையும் பாபா பக்ருதீன் விடியோவில் திரையிட்டுள்ளாா் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனா். இதன் காரணமாகவே, முதல் கட்டமாக அந்த சொத்து முடக்கப்பட்டதாகவும் என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடா்புடையவா்களின் பிற நபா்களின் சொத்துகளையும் முடக்குவதற்குரிய நடவடிக்கையில் என்ஐஏ நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருபுவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விச... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே விவசாயி கொலை? மைத்துனர் உள்பட இருவரிடம் போலீஸ் விசாரணை!

வாழப்பாடி அருகே விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் உறவினர்கள் இருவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 4 மாதங்களுக்கு முன் மாயமான விவசாயியை அவரது சகோதரியின் கணவர... மேலும் பார்க்க

அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

சிவகங்கை காவல் துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விச... மேலும் பார்க்க

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் பலி; மேலும் பலர் காயம்

சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர், மேலும் பலர் காயமடைந்தனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி சின்னகாமன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் வேலை நடந்துகொண்டிர... மேலும் பார்க்க

சமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக தமிழக காவல் துறை! - விஜய் கடும் கண்டனம்

சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக தமிழக காவல் துறை செயல்படுவதாக தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.சிவகங்கமி மாவட்டம் திருபுவனத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்காக அழ... மேலும் பார்க்க

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 840 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் ரூ. 9,000 யை எட்டியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய... மேலும் பார்க்க