செய்திகள் :

பயணிக்கு CPR முதலுதவி செய்த TTE; ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட வீடியோ; மருத்துவர்கள் எதிர்ப்பது ஏன்?

post image

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியன் ரயில்வே வெளியிட்ட வீடியோ ஒன்றில் டிக்கெட் பரிசோதகர் டிடிஇ, பயணி ஒருவருக்கு சி.பி.ஆர் செய்து உயிரைக் காப்பாற்றியது பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த பதிவுக்கு மருத்துவர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

அம்ரபாலி எக்ஸ்பிரஸ் ரயிலின் பொது வகுப்பில் பயணம் செய்த 70 வயது பயணி ஒருவருக்கு மருத்துவ உதவி தேவைப்படும் சூழல் உருவாகியிருக்கிறது.

அப்போது உதவ முன்வந்த டிடிஇ, உயிர்காக்கும் Cardiopulmonary Resuscitation எனப்படும் சி.பி.ஆர் முறையில் அவருக்குச் சிகிச்சை அளித்துள்ளார். இந்த வீடியோவைதான் ரயில்வே அமைச்சகம் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டது.

70 வயது பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது டிடிஇ உடனடியாகச் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றியதாகவும், பின்னர் சாப்ரா ரயில் நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் அவரை அனுமதித்ததாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்துக்காகச் சிலர் டிடிஇ-க்கு பாராட்டுகளைத் தெரிவித்தாலும் மருத்துவர்கள் சி.பி.ஆர் கொடுக்கப்பட்டது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இந்த வீடியோ பார்ப்பவர்களைத் தவறாக வழிநடத்தக்கூடும் எனக் கூறும் மருத்துவர்கள், இதை நீக்குமாறு அமைச்சகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வீடியோ:

"இந்த இடத்தில் சிபிஆர் கொடுக்கக் கூடாது. வாயோடு வாய் வைத்து ஊதுவதும் இங்குத் தேவையற்றது. நீங்கள் உண்மையாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றால் வீடியோவை நீக்குங்கள். பள்ளி, கல்லூரிகளிலிருந்து சிபிஆர் கொடுக்க கற்றுக்கொடுங்கள்" என ஒருவர் கமண்ட் செய்துள்ளார்.


இந்த வீடியோ குறித்து மருத்துவரிடம் பேசினோம். சென்னையைச் சேர்ந்த மருத்துவர் பா. கவின் பேசும்போது, "சிபிஆர் என்பது சுய நினைவில்லாத நோயாளிகளுக்கானது. Resuscitation என்பதற்கு இழந்த வாழ்வை மீட்டுவருவது என்று பொருள். இதயத் துடிப்பு இல்லாத அல்லது பலவீனமான இதயத் துடிப்பு உள்ள, மூச்சு விடாத நபர்களுக்கு CPR கொடுக்கலாம்.

இந்த வீடியோவில் அவரை அழைக்கும்போது நோயாளி செவி சாய்க்கின்றார். சுயநினைவுடன் இருக்கின்றார். இவருக்கு சிபிஆர் செய்வது அவசியமற்றது. ஆபத்தானதும் கூட. எனவே இந்த வீடியோ தவறாக வழிநடத்தக்கூடியது.

மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கான உடனடி மருந்துகள் உள்ளன. ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டவர்கள் அல்லது பலவீனமான இதயம் கண்டறியப்பட்டவர்கள் எப்போதும் கையில் மருத்துகளை வைத்திருக்க வேண்டும். மருந்துகள் கையில் இல்லாதபட்சத்தில், உடன் இருப்பவர்கள் முடிந்தவரை விரைவாக மருத்துவரின் உதவியை நாடுவதே முக்கியம்." எனக் கூறினார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Health: தண்ணீரை ஊற்றியா... பாத்திரத்திலா? - காய்கறிகள், பழங்கள் கழுவும் முறைகள்!

காய்கறிகளை முறையாகச் சுத்தம் செய்து உபயோகிப்பது கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும். சமையலின் கொதிநிலையில் கிருமிகள் போய்விடும் என்ற பொதுக்கருத்து நிலவினாலும், நீரில் நன்கு சுத்தம் செய்து சமையலில்... மேலும் பார்க்க

Doctor Vikatan: நீரிழிவு பாதித்த எல்லோருக்கும் பார்வையில் பிரச்னைகள் வருமா?!

Doctor Vikatan: என் வயது 45. சர்க்கரை நோய்இருக்கிறது. எனக்கு சமீபகாலமாக பார்வையில் சில பிரச்னைகள்இருக்கின்றன. நீரிழிவு பாதித்துவிட்டாலே, கண் பார்வையில் பிரச்னை வரும், அது போகப் போக தீவிரமாகும் என்று ச... மேலும் பார்க்க

Fish : கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன்... எது சிறந்தது? - டயட்டீஷியன் விளக்கம்!

ஒரு தட்டில் சுடச்சுடச் சோற்றுடன் சூடான மீன் குழம்பும், அதற்குத் தொட்டுக்கொள்ள இரண்டு வறுத்த மீன் துண்டுகளும் இருந்தால்போதும்... மீன் பிரியர்கள் தங்கள் கவலைகளை எல்லாம் மறந்தேபோய்விடுவார்கள். மீனுக்கும்... மேலும் பார்க்க

America: 50 மணி நேர முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி; மருத்துவத் துறையின் புதிய சாதனை; பின்னணி என்ன?

முகமாற்று அறுவை சிகிச்சை என்பது மெடிக்கல் மிராக்கிள்தான். அதிலும், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முகத்தின் உணர்வுகளையும் மீட்டு எடுத்திருக்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள். அமெரிக்காவின் மிக்சிகன் ( Mich... மேலும் பார்க்க

நின்ற இதயம், 120 நிமிடங்கள் கழித்து துடித்தது... ஒடிசாவில் நடந்த மெடிக்கல் மிராக்கிள்!

eCPR சிகிச்சை மூலம் இதயத்துடிப்பு நின்ற 120 நிமிடங்களுக்குப் பிறகு, நோயாளி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஒடிசாவில் நாயகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் இதயத்துடிப்பு கிட்டத்தட்ட 90... மேலும் பார்க்க

Health: பச்சையா, வறுத்ததா, வேக வைத்ததா... வேர்க்கடலையில் எது நல்லது?

எல்லாருக்கும் பிடிச்ச ஒரு தின்பண்டம் வேர்க்கடலை. சிலருக்கு பச்சையா சாப்பிட பிடிக்கும். சிலருக்கு ரோட்டோரங்கள்ல உப்புத்தண்ணி தெளிச்சு வறுத்து தர்ற வேர்க்கடலை பிடிக்கும். இன்னும் சிலருக்கு வேக வெச்ச வே... மேலும் பார்க்க