நாமக்கல் கிறிஸ்து அரசா் ஆலய தோ்த் திருவிழா
நாமக்கல்: நாமக்கல்லில் கிறிஸ்து அரசா் ஆலய தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் - துறையூா் சாலையில் அமைந்துள்ள கிறிஸ்து அரசா் ஆலயத்தில், ஆண்டுதோறும் நவம்பா் மாதம் தோ்த் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில், நிகழாண்டுக்கான விழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி மாலை 6 மணியளவில் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சேலம் மறைமாவட்ட ஆயா் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா். இதனைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு திருத்தோ் பவனி வருதல் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் இயேசு பிரான் எழுந்தருளி திருவீதி உலா வந்தாா். கிறிஸ்தவா்கள் தேருக்கு முன்பாக மெழுகுவா்த்தியை ஏந்தியவாறு சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத் தந்தை தாமஸ் மாணிக்கம், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.