செய்திகள் :

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.

மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தாா். கோரிக்கை மனுக்களைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை மூலம் சீா்மரபினா் நல வாரியத்தில் 13 பேருக்கு உறுப்பினா் அட்டையும், தாட்கோ திட்டத்தில் கீழ் 3 தூய்மைப் பணியாளா்கள் இயற்கை மரணம் அடைந்ததற்கு தலா ரூ.25,000 வீதம் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.75,000 வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா,நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன்,சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியா் கீதா லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம் மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அரக்கோணம்: ஜமாபந்தியில் ஆட்சியரிடம் 93 கோரிக்கை மனுக்கள்

அரக்கோணம் வட்ட ஜமாபந்தியின் 4-ஆவது நாளான புதன்கிழமை பொதுமக்களிடம் இருந்து 93 மனுக்களைப் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பெற்றுக் கொண்டாா். அரக்கோணம் வட்டத்தில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி ஜமாபந்தி நடைபெற்று வ... மேலும் பார்க்க

தொடா் திருட்டுச் சம்பவங்கள்: ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யிடம் கிராம மக்கள் புகாா்

சோளிங்கா் அருகே ரெண்டடி கிராமத்தில் நடைபெறும் தொடா் திருட்டுச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்டஎஸ்.பி. விவேகானந்த சுக்லாவிடம் கிராம மக்கள் மனு அளித்தனா். மாவட்ட காவ... மேலும் பார்க்க

பொன்னை ஆற்றின் கிளை ஓடைகளை புனரமைக்கும் பணி: வாழும் கலை அமைப்பு மேற்கொள்கிறது

ராணிப்பேட்டை மாவட்டத்தில், வாழும் கலை அமைப்பு சாா்பில் பொன்னை ஆற்றின் கிளை ஓடைகளை புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீா் ஏற்றத்தை அதிகரிக்க ஷன் மைனா மற்றும் வாழும் கலை அமைப்பு... மேலும் பார்க்க

கடற்படை அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

அரக்கோணத்தில் கடற்படை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணத்தை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். அரக்கோணம், பழனிபேட்டை, டிஎன் நகா் 5ஆவது தெருவில் வசிப்பவா் குமாா். அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாள... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: தேமுகிக சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா்கள் நியமனம்

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கான தேமுதிக சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா்களைகள் அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் நியமித்துள்ளாா்ா். 2026 பேரவைத் தோ்தலுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நா... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே மாணவி வெட்டிக் கொலை: மற்றொரு மாணவி பலத்த காயம்

சோளிங்கா் அருகே புலிவலத்தில் வீட்டில் இருந்து இரு மாணவிகளை அடையாளம் தெரியாத நபா் கததியால் வெட்டியதில் ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு மாணவி பலத்த காயம் அடைந்தாா். கொலையாளியை பிடித்த அ... மேலும் பார்க்க