பயாஸ்கோப் ரிலீஸ் தேதி!
சத்யராஜ் , சேரன் நடிப்பில் உருவாகியுள்ள பயோஸ்கோப் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெங்காயம், நெடும்பா, ஒன் ஆகிய படங்களை இயக்கிய சங்ககிரி ராச்குமார் பயோஸ்கோப் படத்தை இயக்கியுள்ளார்.
சந்திர சூர்யன், பிரபு, பெரியசாமி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் மாணிக்கம், வேலம்மாள், முத்தையா உடன் சேரன், சத்யராஜ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள்.
இதன் டீசர் டிச.22இல் வெளியானது. இதற்கு மிஷ்கின் குரல் கொடுத்திருந்தார். இதனை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்தப் படம் ஜன.3ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஹா ஓடிடி இந்தப் படத்தினை வெளியிட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.