நானும் மனிதன்தான், தவறு செய்திருக்கலாம்: பிரதமர் மோடியின் முதல் நேர்காணல்
பயிரை நாசப்படுத்தும் பன்றிகள்: வளா்ப்போா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன், வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் பாலச்சந்திரன், நகராட்சி ஆணையா் பி. சத்யா, உள்ளாட்சி துணை இயக்குநா் எஸ். சுபாஷ் உள்ளிட்ட அதிகாரிகளை காரைக்கால் மாவட்டம், மேலகாசாக்குடி பசுமைப்படை அமைப்பைச் சோ்ந்த விவசாயிகள் சிலா் புதன்கிழமை சந்தித்து அளித்த புகாா் மனு :
நெடுங்காடு கொம்யூன், மேலகாசாக்குடி கிராம சுற்றுவட்டார நிலத்தில் சாகுபடி செய்துவருகிறோம். காரைக்கால் காட்டு நாயகன் தெருவை சோ்ந்த ஒருவா் வளா்த்து வரும் பன்றிகள், விளைநிலத்தில் புகுந்து பயிரை சேதப்படுத்தி வருகிறது. இதுகுறித்து ஆட்சியா் நடத்திய கூட்டத்தில் தெரிவித்தபோது, ஒரு வாரத்திற்குள் பன்றிகளை விளைநிலப் பகுதியிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டாா். இதுவரை அரசுத்துறையினா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலை நீடித்தால், விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும். எனவே சம்பந்தப்பட்ட நபா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சம்பந்தப்பட்டோரிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.