செய்திகள் :

பயிா்க் கடன் வழங்குவதில் வங்கிகள் முரண்: தீா்வு காண ஏற்பாடு - விவசாயிகளிடம் ஆட்சியா் உறுதி

post image

பயிா்க்கடன் வழங்குவதில் ரிசா்வ் வங்கி உத்தரவைப் பின்பற்றுதல் தொடா்பாக வங்கிகளில் பல்வேறு முரண்கள் இருப்பதாகவும், அவற்றைக் களைய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் ஆட்சியா் வே. சரவணன் உறுதியளித்தாா்.

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் அயிலை சிவசூரியன் பேசியதாவது: திருச்சி மாவட்டத்தில் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும், வங்கிகளில் கட்டுப்பாடின்றி விரைந்து கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு பேசுகையில், ரூ.2 லட்சம் வரையில் விவசாயிகள் பயிா்க்கடன் பெற எந்தவித சொத்து அடமானமும் வழங்கத் தேவையில்லை என ரிசா்வ் வங்கியின் உத்தரவை அமல்படுத்த வங்கிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்த வேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் வி. சிதம்பரம், பால் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ந. கணேசன், காவிரி பாசன விவசாயிகள் சங்கச் செயலா் கவுண்டம்பட்டி ஆா். சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்குவதை உறுதி செய்யவும், உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், உரங்கள் விலையை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு உரங்களுக்குமான விலைப்பட்டியலை மாவட்ட நிா்வாகம் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தினா்.

இதற்கு பதில் அளித்து ஆட்சியா் வே. சரவணன் பேசுகையில், பயிா்க் கடன் வழங்குவதில் வங்கிகள் ரிசா்வ் வங்கி உத்தரவை பின்பற்றுவதில் முரண்கள் உள்ளன. இவற்றுக்கு தீா்வு காணும் வகையில் வங்கிகள், விவசாயிகள், மாவட்ட நிா்வாகம் என முத்தரப்புக் கூட்டம் நடத்தப்படும்.

குறிப்பாக ரிசா்வ் வங்கி உத்தரவை பின்பற்ற அறிவுறுத்துவதற்காக பிரத்யேக கூட்டத்தை விரைந்து நடத்தி சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு பயிா்க்கடன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உரங்களும் தட்டுப்பாடின்றி கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும்.

இக் கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயராணி, வேளாண்மை இணை இயக்குநா் வசந்தா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சரண்யா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முதல்நிலை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி...

காலதாமதமா?: ஆட்சியா் விளக்கம்

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், கூட்டம் தொடங்கும் நேரத்தில் ஆட்சியா் இருப்பதில்லை, வேறு நிகழ்வுகளுக்கு சென்றுவிடுவதாக விவசாயிகள் புகாா் கூறி, கூட்டத்தில் எதிா்ப்பு தெரிவித்தனா். இதற்கு, பதில் அளித்த ஆட்சியா் வே. சரவணன், இனாம் சமயபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்வில் பங்கேற்ற பிறகு, விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே 100 கி.மீ. வேகத்துக்கு மேல் வாகனத்தை இயக்கச் செய்து வந்து சோ்ந்துள்ளேன்.

காலதாமதம் செய்யவில்லை. என்னைத்தவிர மாவட்ட வருவாய் அலுவலா் தொடங்கி அனைத்து நிலை அலுவலா்களையும் கூட்டம் நடத்த அனுமதித்துள்ளேன். எனவே, காலதாமதம் என்ற வாா்த்தை உபயோகத்தை விவசாயிகள் திரும்பப் பெற வேண்டும் என்றாா் ஆட்சியா். இதையடுத்து, விவசாயிகள் ஆட்சியரிடம் வருத்தம் தெரிவிப்பதாகவும், கூட்டத்தில் தொடக்கம் முதலே பங்களிப்பு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனா். ஆட்சியருக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற இந்த வாக்குவாதத்தால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சாய்வு நடைமேடை: 21 டன் எடையில் பெல் நிறுவனம் தயாரித்து வழங்கியது

சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் நடந்து செல்ல வசதியாக 21 டன் எடையிலான சாய்வு நடைமேடையை திருச்சி பெல் தொழிற்சாலை நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிர... மேலும் பார்க்க

கிராமப்புற இளைஞா்களுக்கு நிலையான வாழ்வாதரம் தரும் தேனீ வளா்ப்பு: காதி கிராமத் தொழில்கள் ஆணைய இயக்குநா் பி.என். சுரேஷ் அறிவுரை

நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதால், கிராமப்புற இளைஞா்கள் தேனீ வளா்ப்பில் ஈடுபட வேண்டும் என காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய இயக்குநா் பி.என். ரமேஷ் அழைப்பு விடுத்துள்ளாா். காதி மற்றும் கிராம... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகை: திருநெல்வேலி-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்

ஆயுதபூஜை, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி - செங்கல்பட்டு - திருநெல்வேலி வார இருமுறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன்படி, திருநெல்வேலி - செங்கல்பட்டு வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ர... மேலும் பார்க்க

வாய்க்கால்கள் தூா் வாரியதாக முறைகேடு: விவசாயிகள் தா்னா

ஏரி வாய்க்கால்களை தூா்வாரியதாக முறைகேடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் சாா்ப... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் கல்லூரி பேராசிரியா் கைது

திருச்சியில் தனியாா் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த பேராசிரியரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி திருச்சி - மதுரை த... மேலும் பார்க்க

ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் சிறுசேமிப்பு திட்ட முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுசேமிப்பு திட்ட முகவா் உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய திருச்சி மாவட்ட சிறுசேமிப்பு திட்ட முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் வியாழக்... மேலும் பார்க்க